உள்ளாட்சி தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு: மக்கள் தேசிய கட்சி அறிவிப்பு

சென்னை: உள்ளாட்சி தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக மக்கள் தேசிய கட்சி தலைவர் சேம நாராயணன் அறிவித்துள்ளார். மக்கள்தேசிய கட்சி தலைவர் சேம நாராயணன் வெளியிட்ட அறிக்கை: அதிமுகவுக்கு தேர்தல் நடந்தால் தோல்வி வந்துவிடும் என்ற பயத்தால் தேர்தல் ஆணையம் அவர்களுக்கு சாதகமாக குளறுபடிகளை செய்து அதிமுகவின் கைப்பாவையாக செயல்படுகிறது.  ஊராட்சிகளுக்கு மட்டும் தேர்தலை நடத்தி அதிமுக வெற்றி பெற்ற பிறகு மற்ற மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு தேர்தலை நடத்தலாம் என்று நினைக்கலாம்.

இது அவர்களுக்கு தோல்வியில் தான் முடியும். காரணம் 1986ம் ஆண்டு தமிழகத்தில் செல்வாக்கோடு முதல்வர் எம்ஜிஆர் ஆட்சி செய்த போது மாநகராட்சிகளை தவிர்த்து மற்றவைகளுக்கு உள்ளாட்சி தேர்தலை நடத்தினார். ஆனால், எதிர்க்கட்சியாக இருந்த திமுக தான் அமோகமாக வெற்றி பெற்றது. இது வரலாறு.

எப்போது தேர்தல் வந்தாலும் திமுக கூட்டணி தான் அமோகமாக வெற்றி பெறும் என்பது உள்ளங்கை நெல்லிக்காய் போன்றது. மக்கள் தேசிய கட்சி தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நல கூட்டமைப்பு தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர் (குலாலர்) சங்கம் தொடர்ந்து தி.மு.கவுக்கு ஆதரவாக இருந்து வருகிறது. அந்த வகையில் திமுகவுக்கு உள்ளாட்சி தேர்தலில் முழு ஆதரவை தெரிவித்துக்கொள்கிறோம். வெற்றிக்கும் தொடர்ந்து பாடுபடுவோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>