என்கவுண்டரில் பலியான 4 பேரும் கால்நடை மருத்துவர் டிசா உடலை எரிக்க பெட்ரோல் வாங்கிய சிசிடிவி காட்சிகள் வெளியீடு

ஹைதராபாத்: ஹைதராபாத் என்கவுண்டரில் பலியான 4 பேரும் கால்நடை மருத்துவர் டிசா உடலை எரிக்க பெட்ரோல் வாங்கிய சிசிடிவி பதிவு காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த மாதம் 27ம் தேதி ஹைதராபாத் அடுத்த சட்டான்பள்ளியில் கால்நடை மருத்துவர் டிஷா லாரி ஓட்டுநர் மற்றும் கிளினர்கள் நான்கு பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். குற்றவாளிகள் அதன பின் டிஷா உடலை பெட்ரோல் ஊற்றி எரித்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய முதல் குற்றவாளி முகமது ஆரிப் உட்பட நான்கு பேரையும் கைது செய்த தெலுங்கானா போலீசார், விசாரணைக்குப் பின் சிறையில் அடைத்தனர்.

Advertising
Advertising

இதனை தொடர்ந்து நேற்று அதிகாலை 4 பேரையும் நீதிமன்ற அனுமதியுடன் சம்பவம் நடைபெற்ற இடத்தில் நடித்து காட்டுவதற்காக பாதுகாப்புடன் அழைத்து வந்தனர். அப்போது போலீசார் மீது தாக்குதல் நடத்திய நான்கு பேரும் தப்பி ஓட முயன்ற நிலையில் போலீசார் அவர்களை சுட்டுக் கொலை செய்தனர். இந்த நிலையில் முகமது ஆரிப் உட்பட 4 பேரும் சம்பவம் நடைபெற்ற அன்று டிஷா உடலை எரிக்க பெட்ரோல் வாங்கியது தொடர்பான சிசிடிவி பதிவு காட்சிகளை போலீசார் இன்று வெளியிட்டுள்ளனர்.

Related Stories: