மாநில திட்டங்களை பற்றி பேச வந்த ஜெகன் மோகனை சந்திக்க மோடி, அமித் ஷா மறுப்பு : கோபத்துடன் ஆந்திரா திரும்பினார்

புதுடெல்லி: பிரதமர் மோடி, அமித்ஷா வை சந்திக்க அனுமதி கிடைக்காததால் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் தனது டெல்லி பயணத்தை ரத்து செய்து திரும்பினார். ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி நேற்று முன்தினம் மாலை டெல்லி வந்தார். பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமி த்ஷாவை சந்தித்து ஆந்திராவில் நிலுவையில் உள்ள  திட்டங்களை செயல்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்த இருந்தார். . மேலும், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து தரும் விவகாரம் தொடர்பாக பிரதமரை சந்திக்க திட்டமிட்டிருந்தார்.

ஆனால், மோடி,  அமித் ஷாவின் நேற்றைய நிகழ்ச்சி நிரலில் ஜெகனுடனான சந்திப்பு இடம் பெறவில்லை. ஆனாலும், முதல்வர் அலுவலகம் மோடி, அமித் ஷாவை சந்திக்க அனுமதி கேட்டிருந்தது. இந்த நிலையில், நேற்று அவர் தனது டெல்லி பயணத்தை திடீரென ரத்து செய்துவிட்டு கோபத்துடன் ஆந்திரா திரும்பினார்.  அவர் தனது தனி உதவியாளரின் இறுதிச் சடங்களில் பங்கேற்பதற்காக அவர் அவசரமாக ஆந்திரா திரும்பி விட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: