பாம்பு கடித்த மூதாட்டியை மூங்கிலில் துணி கட்டி 8 கிமீ சுமந்து சென்ற கிராமவாசிகள்

புனே: மகாராஷ்டிராவின் புனே மாவட்டத்தில் சந்தர் என்ற குக்கிராமம் உள்ளது. இந்த கிராமத்துக்கு முறையான சாலை வசதி கிடையாது. இந்த கிராமத்தை சேர்ந்த பர்காபாய் சாங்க்ளே (65) என்ற மூதாட்டியை வீட்டின் அருகே பாம்பு கடித்து விட்டது.இதனால் பதறிப்போன உறவினர்களும் அந்த ஊர் மக்களும் அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடிவு செய்தனர். ஆனால் அங்கிருந்து 8 கிமீ தூரத்துக்கு சாலை வசதி எதுவும் கிடையாது. அந்த கிராமவாசிகள் மூங்கிலில் துணி கட்டி கட்டில் போன்று தயாரித்து அந்த மூதாட்டியை அதில் தூக்கிச் சுமந்தனர். சுமார் 8 கிமீ தூரத்தில் உள்ள பன்ஷேத் அணை அருகே சாலை உள்ளது. அதுவரை மூதாட்டியை மூங்கில் கட்டிலில் சுமந்து சென்று அங்கு தனியார் ஜீப்பில் ஏற்றினர்.

பிறகு அங்கிருந்து மேலும் 15 கி.மீ. தூரம் சென்று கானாபூர் என்ற இடத்தில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்தில் அவரை சேர்த்தனர். அங்கு அந்த பெண்ணுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பிறகு அவர் ஆம்புலன்ஸ் மூலம்  புனேயில் உள்ள மாநில அரசுக்கு சொந்தமான சசூன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

Related Stories:

>