குடியுரிமை குறித்து வடகிழக்கு முதல்வர்களுடன் அமித்ஷா இன்று ஆலோசனை

புதுடெல்லி: குடியுரிமை சட்ட மசோதா தொடர்பாக வடகிழக்கு மாநில முதல்வர்களுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று ஆலோசனை நடத்த உள்ளார். வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் மத ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாகி இந்தியாவில் தஞ்சமடைந்த இந்துக்கள், சீக்கியர், புத்த, பார்சி மற்றும் கிறிஸ்தவர்களுக்கு குடியுரிமை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.  இதற்காக குடியுரிமை சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள உள்ளது. இச்சட்டத் திருத்தத்திற்கு, அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் கடுமையான எதிர்ப்பு நிலவி வருகிறது.

இதனால், வடகிழக்கு மாநிலத்தவர்களின் கருத்துகளை அறியும் வகையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏற்பாடு செய்த 3 நாள் ஆலோசனை கூட்டம் டெல்லியில் நேற்று தொடங்கியது. இக்கூட்டத்தில் அமித்ஷா, வடகிழக்கு மாநிலத்தை சேர்ந்த மாநில முதல்வர்கள், அருணாச்சல பிரேசதம், மேகாலயா, நாகாலாந்து மாநில மாணவர் அமைப்பினர், போடோ மாணவர் சங்கத்தினர் உள்ளிட்டோரை சந்திக்கிறார். மேலும் முக்கிய அரசியல் கட்சி தலைவர்களின் ஆலோசனையையும் அவர் கேட்டறிகிறார். நேற்றைய சந்திப்பில் சமூக கலாச்சார அமைப்பை சேர்ந்த பிரநிதிகளை சந்தித்த அமித்ஷா இன்று வடகிழக்கு மாநில முதல்வர்களை சந்திக்க உள்ளார்.

Related Stories: