குவைத்தில் இருந்து சென்னை வந்த பெண் பயணி மரணம்

சென்னை: குவைத்தில் இருந்து சென்னை வந்த குவைத் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று அதிகாலை 2.30 மணிக்கு சென்னை வான்வெளியை நெருங்கியது. அப்போது விமானத்தில் பயணம் செய்த விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டையை சேர்ந்த பெண் பயணி மொய்தீன் பீவி (65) என்பவருக்கு திடீர் நெஞ்சுவலி எற்பட்டது. அவர் விமானத்திலேயே வலி தாங்க முடியாமல் துடித்தார். உடனே, பணிப்பெண்கள் விமானிக்கு தகவல் கொடுத்தனர். விமானி உடனடியாக சென்னை விமான  நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். அதன்படி விமானம் சென்னையில் தரை இறங்கியதும் தயாராக இருந்த மருத்துவக் குழுவினர் பயணி மொய்தீன் பீவியை சோதனை செய்தனர். பிறகு விமான நிலைய மருத்துவமனையில் சேர்ப்பதற்காக ஸ்டிரெச்சர் மூலம் கீழே இறக்கி கொண்டு வந்தனர். விமானத்தில் இருந்து கீழே கொண்டு வந்தபோது அவரது உயிர் பிரிந்தது. கடுமையான மாரடைப்பால் அவர் இறந்ததாக மருத்துவக் குழுவினர் தெரிவித்தனர். பிறகு சென்னை விமான நிலைய போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் அவரது உடலை உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

Related Stories: