21 வயதில் நீதிபதியான ராஜஸ்தான் வாலிபர்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் 21 வயது வாலிபர் நீதிபதியாகி உள்ளார். இதன் மூலம், மிகவும் இளம் வயது நீதிபதி என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். ராஜஸ்தானில் நீதித்துறை பணிகளுக்கான தேர்வு எழுதுவதற்கான வயது வரம்பு 23 ஆக இருந்தது. இந்த வயது வரம்பை 21 ஆக குறைத்து இந்த ஆண்டு ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் காரணமாக, தகுதியுள்ள ஏராளமான இளம் வயதினர் இந்த தேர்வில் பங்கேற்றனர். தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில் 21 வயது வாலிபர் இந்த தேர்வில் தேர்ச்சி பெற்று நீதிபதியாகி உள்ளார்.

ஜெய்ப்பூரை சேர்ந்த மயாங் பிரதாப் சிங் என்ற இந்த வாலிபர் ராஜஸ்தான் பல்கலைக் கழகத்தில் கடந்த 2014ம் ஆண்டு சட்டப்படிப்பில் சேர்ந்துள்ளார். இந்த ஆண்டுடன் இவரது படிப்பு முடிவடைகிறது. இந்நிலையில், மயாங் நீதிபதியாகி உள்ளார். இது குறித்து மயாங் பிரதாப் சிங் கூறுகையில், “ முதல் முயற்சியிலேயே வெற்றி பெற உதவிய எனது குடும்பம், ஆசிரியர்கள் மற்றும் எனது நலன் விரும்பிகளுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.

Related Stories: