இந்தியாவிலேயே அதிக மருத்துவர்கள் கொண்ட மாநிலங்களில் தமிழகம் 2வது இடம்: மத்திய அரசு தகவல்

புதுடெல்லி: இந்தியாவிலேயே அதிக மருத்துவர்கள் கொண்ட மாநிலங்களில் தமிழகம் 2வது இடத்தை பிடித்துள்ளது. தமிழகத்தில் மொத்தம் பதிவு செய்யப்பட்டுள்ள மருத்துவர்களின் எண்ணிக்கை 1,35,456 ஆகும். அதிக மருத்துவர்கள் கொண்ட மாநிலத்தின் பட்டியலில் மகாராஷ்டிரா முதலிடத்தை பிடித்துள்ளது. இங்கு பதிவு செய்யப்பட்ட மருத்துவர்களின் எண்ணிக்கை 1,73,384 ஆகும். இதையடுத்து, 1,22,875 மருத்துவர்களுடன் கர்நாடகா 3ம் இடத்தில் உள்ளது. நாட்டிலேயே குறைந்தபட்சமாக மிசோரம் மாநிலத்தில் 74 மருத்துவர்கள் மட்டுமே உள்ளனர்.

Related Stories: