கேரளாவில் அதிரடியாக சினிமா கட்டணம் உயர்வு 10 முதல் 30 வரை அதிகரிப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் சினிமா டிக்கெட்டுகளுக்கு ஜிஎஸ்டி வரியுடன் நலநிதி வரி, கேளிக்கை வரி, வெள்ளச்சேத வரி ஆகியவற்றை விதிக்க கேரள அரசு தீர்மானித்தது. இதற்கு தியேட்டர் உரிமையாளர்கள், சினிமா தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் உள்பட சினிமா துறையினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இருப்பினும் கேரள அரசு அதற்கு செவிசாய்க்கவில்லை. இதையடுத்து கடந்த 13ம் தேதி கேரளா முழுவதும் சினிமா தியேட்டர்களில் ஒருநாள் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அன்றைய தினம் படப்பிடிப்புகளும் அதிரடியாக ரத்து செய்யப்பட்டன.

கேரள அரசின் நடவடிக்கையை எதிர்த்து சினிமா தயாரிப்பாளர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது.  இந்நிலையில் நேற்று முதல் கேரளாவில் தியேட்டர்களில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு வகுப்பிலும் குறைந்தது 10 முதல் ₹30 வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இன்று முதல் தியேட்டர்களில் குறைந்தபட்ச கட்டணம் 130 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Related Stories: