திருமாவளவன் குறித்து அவதூறு கருத்து நடிகை காயத்ரி ரகுராம் வீடு முற்றுகை: விசிக மகளிர் அணியினர் கைது

சென்னை: விசிக தலைவர் திருமாவளவன் குறித்து டிவிட்டரில் அவதூறு கருத்துக்களை பதிவிட்டதாகக் கூறி நடிகை காயத்ரி ரகுராம் வீட்டை முற்றுகையிட்டு விசிக பெண் நிர்வாகிகள் போராட்டம் நடத்தினர்.  இந்து கோயில்களில் உள்ள சிலைகள் குறித்து விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்த கருத்துக்கு எதிராக நடிகையும் பாஜ ஆதரவாளருமான காயத்ரி ரகுராம் கடந்த 2 நாட்களாக தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு வந்தார். தனது பேச்சுக்கு திருமாவளவன் விளக்கம் கொடுத்திருந்ததை, ‘நடிப்பு பத்தல’ என விமர்சித்திருந்தார். இதற்காக தனக்கு வந்த மிரட்டல் அழைப்புகளை காயத்ரி ரகுராம் நேரலை செய்தார். மேலும் வரும் நவம்பர் 27ம் தேதி காலை 10 மணி அளவில் மெரினாவில் சந்திக்கிறேன்.

அப்போது என்னை திருமாவளவன் சந்தித்து விவாதிக்க தயாரா என்றும் கேள்வி எழுப்பினார். இதை கண்டித்து விசிக மகளிர் அணி சார்பில் நுங்கம்பாக்கத்தில் உள்ள காயத்ரி ரகுராம் வீட்டை நேற்று பெண் நிர்வாகிகள் 50க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட முயன்றனர். அவதூறு கருத்தை தெரிவித்த காயத்ரி ரகுராமை கைது செய்யும் வரை இங்கிருந்து செல்ல மாட்டோம் என்று கூறி தொடர் முற்றுகை போராட்டம் நடத்தினர். செருப்புகளை வீசியும் எதிர்ப்பு தெரிவித்தனர்  இதை தொடர்ந்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

Related Stories: