மத்திய பிரதேசத்தில் பசு எண்ணிக்கையை அதிகரிக்க பாலின பிரிப்பு விந்து மையம்

போபால்: மத்தியப் பிரதேச கால்நடை வளர்ப்புத் துறை அமைச்சர் லக்கன் சிங் யாதவ் நேற்று அளித்த பேட்டி: மத்தியப் பிரதேசத்தின் போபாலில் அமைந்துள்ள கால்நடை வளர்ச்சி கழகத்தின் விந்து மையம், பாலின பிரிப்பு விந்து உற்பத்தி மையத்தை தொடங்கவுள்ளது. இது, ரூ.47.5 கோடியில் அமைக்கப்படும். இதற்கான 60 சதவீத நிதியை மத்திய அரசு வழங்கும். மீதத் தொகையை மாநில அரசு வழங்கும். இதன் மூலம், பசுக் கன்றுகளின் கருக்கள் இலவசமாக விநியோகிக்கப்படும். இந்த தொழில்நுட்பம் மூலம் பசுக் கன்றுகளின் பிறப்பு 90 சதவீதம் அதிகரிக்கும். இந்த மையம் மூலம் உள்நாட்டு வகை பசுக்களான கிர், தர்பர்கர், ஷாகிவால் மற்றும் முர்ரா வகை கன்றுகள் உற்பத்தி செய்யப்படும் என்றார்.

Related Stories: