படுக்கையில் இருக்கும் அமிதாப்பச்சன் ‘ஸ்லோ டவுன்’ மெசேஜால் அதிர்ச்சி

மும்பை: நடிகர் அமிதாப்பச்சன் வீட்டில் படுத்தபடுக்கையில் ஓய்வில் இருக்கிறார். தனது உடல், ‘ஸ்லோ டவுன்’ ஆகியிருப்பதாக அவர் மெசேஜ் வெளியிட்டதால் ரசிகர்கள் உருக்கமாக ஆறுதல் தெரிவித்துள்ளனர். நடிகர் அமிதாப்பச்சனுக்கு 77 வயது ஆகிறது. இன்னமும் திரைப்படங்களில் நடித்து வருகிறார். தமிழில் உயர்ந்த மனிதன் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருப்பதுடன் 2020ம் ஆண்டு வரை படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். இந்நிலை யில் கடந்த சில வாரங்களுக்கு முன் அமிதாப்பச்சனுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. மூச்சு திணறலால் அவதிப்பட்ட அவரை உடனடியாக தனியார் மருத்துவ மனையில் சேர்த்தனர். 3 நாள் சிகிச்சைக்கு பிறகு அவர் வீடு திரும்பினார். ஆனாலும் வெளியில் எங்கும் செல்லாமல் படுத்தபடுக்கையில் ஓய்வில் இருக்கிறார். தனது உடல்நிலை குறித்து அவரே அடிக்கடி இணைய தள பக்கத்தில் தகவல் தெரிவித்து வருகிறார்.

Advertising
Advertising

அமிதாப் தனது வீட்டில் படுக்கையில் படுத்து ஓய்வு எடுத்து வரும் புகைப்படத்தை வெளியிட்டதுடன்,’நாள் முழுவதும் இந்த பெட்டில் படுத்தபடிதான் ஓய்வில் இருக்கி றேன். எனக்கு ஒரே பொழுதுபோக்கு தற்போதைக்கு பிரிமியர் லீக் விளையாட்டு பார்ப்பது மட்டும்தான். இந்த சூழல் எனது உடல்நிலையை ஸ்லோ டவுன் ஆக்குவதற் கான சிக்னல் ஆக இருக்கிறது’ என குறிப்பிட்டுள்ளார். அமிதாப்பின் இந்த மெசேஜை பார்த்த ரசிகர்கள் அவருக்கு உருக்கத்துடன் ஆறுதல் கூறி வருகின்றனர். ‘உடல்நிலையை கவனித்துக்கொள்ளுங்கள், இது கடினமான தருணம். ஆனால் நீங்கள் ஓய்வு எடுக்க கிடைத்திருக்கும் நேரம் பாசிடிவான சூழல்’, ‘டாக்டர்கள் கூறும்வரை ஓய்விலேயே இருங்கள், நீங்கள் எங்களுக்கு மிகவும் விலைமதிப்பற்றவர்’ என குறிப்பிட்டிருக்கின்றனர்.

Related Stories: