சென்னையில் கடல் உணவு ஏற்றுமதியாளரிடம் ரூ.20 லட்சம் மோசடி செய்தவருக்கு போலீஸ் வலை வீச்சு

சென்னை: சென்னையில் கடல் உணவு ஏற்றுமதியாளரிடம் ரூ.20 லட்சம் மோசடி செய்தவருக்கு போலீஸ் வலை வீசி வருகின்றனர். தினேஷ் என்பவரிடம் ரூ.20 லட்சத்துக்கு கடல் உணவை பெற்றுக்கொண்டு ஏமாற்றியதாக அகமது என்பவர் மீது புகார் தெரிவித்தனர். அகமது கேட்டுக்கொண்டதால் ரூ.20 லட்சத்துக்கான கடல் உணவை துபாயில் உள்ள கடைக்கு தினேஷ் அனுப்பி வைத்துள்ளார். 2 மாதங்களாகியும் தினேஷுக்கு ரூ.20 லட்சம் பணத்தை திருப்பித் தராததால் அகமது மீது தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.

Related Stories: