தமிழகத்தில் 4,391 இடங்களில் பேரிடர் பாதிப்புகள் இருக்கும்: அமைச்சர் உதயகுமார் தகவல்

மதுரை: தமிழகத்தில் பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த, அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டது. இதனைத்தொடர்ந்து மதுரையில் நேற்று சிறப்பு விழிப்புணர்வு முகாம் துவக்கி வைக்கப்பட்டது. முகாமிற்கு வருவாய் மற்றும் பேரிடர் மீட்பு ஆணையர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார்.  அமைச்சர்கள் உதயகுமார், செல்லூர் ராஜூ பங்கேற்றனர். முகாமில் அமைச்சர் உதயகுமார் பேசுகையில், ‘‘தமிழகத்தில் 4,391 இடங்கள் பேரிடர் பாதிப்பு ஏற்படும் இடங்களாக  கண்டறியப்பட்டுள்ளது. மதுரையில் துவங்கியுள்ள பேரிடர் மீட்பு முகாம், தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற உள்ளது’’ என்றார்.

அமைச்சர் செல்லூர் ராஜூ பேசுகையில், ‘‘பேரிடர் மீட்பு பணிக்காக தமிழகத்துக்கு ரூ.1,489 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பேரிடர் மீட்பு தொடர்பாக தமிழக அரசு பிரான்ஸ், ஜப்பான் ஆகிய நாடுகளுடன் புரிந்துணர்வு ஓப்பந்தம் போட்டுள்ளது. இதன்மூலம் நவீன தொழில்நுட்பத்தை விரைவில் நாம் பயன்படுத்தி புயல், வெள்ளம், சுனாமி போன்ற பேரிடர்களில் இருந்து நம்மை காத்துக்கொள்ள முடியும். பேரிடர் காலங்களில் நாம் ரூ.5 லட்சம் கோடி மதிப்பிலான பொருளாதாரத்தை இழந்துள்ளோம்’’ என்றார்.

Related Stories: