உடல்நலக்குறைவு காரணமாக இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் மரணம்

கொல்கத்தா: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் குருதாஸ் தாஸ் குப்தா நேற்று உயிரிழந்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் குருதாஸ் தாஸ்குப்தா (வயது 83). கட்சியில் பல்வேறு பொறுப்புகள் வகித்து வந்த அவர், கட்சியின் வளர்ச்சிக்காக பாடுபட்டவர். கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற்சங்கமான ஏஐடியுசியின் பொதுச்செயலாளராக பல ஆண்டுகளாக இருந்து வந்தார்.அதோடு, மக்களவை உறுப்பினர், மாநிலங்களவை உறுப்பினர் என பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். இந்நிலையில், மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் வசித்து வந்த குருதாஸ் தாஸ்குப்தா, இருதயம் மற்றும் சிறுநீரக கோளாறு மற்றும் முதுமைசார்ந்த நோய்களால் கடந்த சில மாதங்களாக அவதிப்பட்டு வந்தார். இதற்காக தொடர்ந்து மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார்.சிகிச்சை பலன் அளிக்காமல், குருதாஸ் தாஸ் குப்தா, நேற்று காலை மரணமடைந்தார். அவருக்கு மனைவி மற்றும் ஒரு மகள் உள்ளனர். குருதாஸ் தாஸ்குப்தா மறைவுக்கு பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தலைவர்கள் இரங்கல்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசனின் இரங்கல் செய்தியில், ‘ஏற்ற தாழ்வற்ற பொதுவுடமைச் சமுதாயம் காணத் துடித்த வங்கத்தின் சிங்கம் குருதாஸ் தாஸ் குப்தா’ என்று கூறியுள்ளார். வைகோ (மதிமுக பொதுச் செயலாளர்): கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் பொறுப்பில் சிறப்பாக செயல்பட்டு மற்ற கட்சித் தலைவர்களின் நன்மதிப்பை பெற்றவர் குருதாஸ் குப்தா என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

இதேபோல் தமிழ் மாநில விவசாய ெதாழிலா ளர் சங்க பொதுச் செயலா ளர் நா.பெரியசாமி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Related Stories: