50 வயது மலையேற்ற வீராங்கனை!

நன்றி குங்குமம் முத்தாரம்

கேரளாவில் உள்ள குமர கோமில் பிறந்தவர் ஜெஸ்ஸி மேத்யூ. கடந்த முப்பது வருடங்களாக அமெரிக்காவில் உள்ள ஒரு மருத்துவமனையில் செவிலியராகப் பணிபுரிந்துவந்தார். கடந்த வருடம் சொந்த ஊருக்குத் திரும்பினார். செவிலியர் பணிபோக மலையேற்றத்தில் தீராத ஆர்வமுடையவர் ஜெஸ்ஸி. சமீபத்தில் ஆப்பிரிக்காவிலேயே உயர்ந்த மலையான கிளிமஞ்சாரோவில் ஏறியிருக்கிறார். இந்த மலையின் உயரம் 5895 கிலோமீட்டர். ஜெஸ்ஸியுடன் 14 பேர் இந்த மலையில் ஏறியிருக்கின்றனர்.

அதில் மூன்று பேர் இந்தியர்கள். மூன்று மாதங்கள் கடுமையான பயிற்சியை மேற்கொண்ட பிறகே மலையேறியிருக்கிறார் ஜெஸ்ஸி. அவருக்கு கேரளா முழுவதும் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன. மலையாளப் பத்திரிகைகள் அவரின் நேர்காணலால் அலங்கரிக்கப்படுகின்றன. காரணம், ஜெஸ்ஸியின் வயது 50.

Related Stories: