அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுவையில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேற்குவங்க கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்து விட்டதாக தெரிவித்துள்ளது. இதையடுத்து, வெப்பச்சலனம் காரணமாக ஈரோடு, தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் நாளை மறுநாள் கனமழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலடுக்கு சுழற்சி காரணமாக வரும் 28, 29ம் தேதிகளில் தென் தமிழகம் மற்றும் கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்றும் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என்று தகவல் தெரிவித்துள்ளது. முன்னதாக, தமிழகத்தின் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கடலூர், மதுரை ஆகிய 11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அடுத்து வரும் 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், அதனை தொடர்ந்தும் புயலாகவும் வலுப்பெற வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

சென்னை பொறுத்து வரையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. இந்த நிலையில், அரபிக்கடல், வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறி நகர்ந்து சென்று விட்டதால் தமிழகத்தில் மழை குறைந்து விட்டது என்றும் 2 நாட்களுக்கு பெரிய அளவில் மழை இருக்காது எனவும் தெரிவித்துள்ளது. வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

Related Stories: