இஸ்ரேலில் ஒரு கீழடி!

நன்றி குங்குமம் முத்தாரம்

இஸ்ரேலிய தொல்பொருள் வல்லுநர்கள் 5 ஆயிரம் வருடங்களுக்கு முந்தையை பழமையான நகரைக் கண்டுபிடித்துள்ளனர். டெல் அவிவ் நகரத்திலிருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஹரிஷ் என்ற இடத்தில் இந்த நகரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ‘‘நெடுஞ்சாலைத் துறையினர் சாலையை விரிவுபடுத்தும் பணியின் போது இந்த நகரம் தட்டுப்பட்டது...’’ என்கிறது இஸ்ரேலின் தொல்பொருள் ஆணையம். இந்த நகரத்தில், கொட்டைகள், குடியிருப்பு பகுதிகள், சடங்கு கோயில்கள், கல்லறைகள் என பல பகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நகரத்தில் சுமார் 6000 மக்கள் வாசித்திருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும், அக்காலத்தில் மக்கள் பயன்படுத்திய பல்வேறு பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

Related Stories: