செங்குத்தான காடு

நன்றி குங்குமம் முத்தாரம்

எதிர்காலத்தில் காடுகளை எப்படி வடிவமைக்கலாம் அல்லது எதிர்காலத்தில் காடுகள் எப்படியிருக்கும் என்பதற்கு ஒரு ப்ளூ ப்ரிண்ட்டை தருகிறது இத்தாலியின் மிலன் நகரில் வீற்றிருக்கும் இரண்டு அடுக்குமாடி குடியிருப்புகள். ஒன்றின் உயரம் 111 மீட்டர். இன்னொன்று 76 மீட்டர் உயரம்.  இரண்டின் பால்கனிகளையும், வெட்ட வெளியையும் 900 மரங்களும், 11 ஆயிரம் செடிகளும், 5 ஆயிரம் புதர்செடிகளும் அலங்கரிக்கின்றன.

இந்த இரு கட்டடங்களையும் செங்குத்தான காடு என்றே அழைக்கின்றனர். இந்த காட்டுக்கு அடிக்கடி பறவைகள் கூட்டமாக வருகின்றன. தவிர, வெப்ப நிலை ஓரளவுக்கு கட்டுப்பாட்டுக்குள் வந்திருப்பதாக அங்கே குடியிருப் பவர்கள் சொல்கின்றனர்.

Related Stories: