பொது இடங்களில் புகைக்கும் தடை சட்டத்தில் கணக்கு காட்டுவதற்காக மட்டுமே குறைந்த அளவில் வழக்கு பதிவு: ராமதாஸ் குற்றச்சாட்டு

சென்னை:  பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:தமிழகத்தில் ஒரு நாளைக்கு சராசரியாக 53 பேர் மீது மட்டும் தான் பொது இடங்களில் புகைப்பிடித்ததாக வழக்குப்பதிவு செய்யப்படுகிறது. தமிழகத்தில் ஒரு கோடிக்கும் கூடுதலானவர்கள் புகைப்பிடிப்பதாக கூறப்படும் நிலையில், 53 பேர் மட்டுமே  பொது இடங்களில் புகைப்பிடிப்பதாக வழக்குப் பதிவு செய்யப்படுகிறது என்றால், அது கணக்கு காட்டப்படுவதற்காக செய்யப்படும் செயல் என்பதை புரிந்து கொள்ளலாம்.பொது இடங்களில் புகைபிடிப்போருக்கு ₹5 ஆயிரம் வரை அபராதம் விதிக்க முடியும். ஆனால், அதிகபட்சமாக ரூ200க்கு மேல் எவரிடமிருந்தும் அபராதம் வசூலிக்கப்படுவதில்லை.

தனி பறக்கும் படைகளை அமைத்து பொது இடங்களில் எங்கெல்லாம் அதிக அளவில் புகை பிடிக்கப்படுகிறதோ, அங்கெல்லாம் அதிரடி ஆய்வுகளை நடத்த வேண்டும். அதிகபட்ச அபராதம்தான் விதிகளை மீறி புகை பிடிப்பதை குறைக்கும்  என்பதால், பொது இடங்களில் புகை பிடிப்பவர்களுக்கு புகைத்தடை சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு அதிகபட்சமாக ₹5,000 அபராதம் விதிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: