பாகிஸ்தான் அகற்றாவிட்டால் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாமை அழிப்போம்: காஷ்மீர் கவர்னர் எச்சரிக்கை

ஸ்ரீநகர்: ‘‘பாகிஸ்தான் அகற்றாவிட்டால், ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாதிகள் முகாம்களை இந்தியாவே அழிக்க நேரிடும்’’ என காஷ்மீர் கவர்னர் சத்ய பால் மாலிக் எச்சரித்துள்ளார். ஸ்ரீநகரில் காஷ்மீர் மாநில கவர்னர் சத்ய பால் மாலிக் நேற்று அளித்த பேட்டியில், ‘‘போர் என்பது மோசமானது. பாகிஸ்தான் அதை புரிந்து நடந்து கொள்ள வேண்டும். தனது மண்ணில் உள்ள தீவிரவாதத்தை அழிக்க வேண்டும். இல்லாவிட்டால் நாங்கள்  பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் நுழைந்து தீவிரவாதிகளை அழிக்க நேரிடும். அது, நேற்றைய தாக்குதலை விட மிக பயங்கரமாக இருக்கும். இது புதிய காஷ்மீர். இங்குள்ள மக்கள் ஒன்றிணைந்து மாநில வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்’’ என்றார்.

Advertising
Advertising

Related Stories: