150வது பிறந்தநாளை முன்னிட்டு பிலிப்பைன்சில் காந்தி உருவச் சிலை திறப்பு

மணிலா: பிலிப்பைன்சில் மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவச் சிலையை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று திறந்து வைத்தார். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 5 நாள் பயணமாக பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு சென்றுள்ளார். தலைநகர் மணிலாவில் உள்ள மிரியம் கல்லூரியில் மகாத்மா காந்தியின் உருவ சிலையை ராம்நாத் கோவிந்த் நேற்று திறந்து வைத்தார். காந்தியின் 150வது பிறந்த நாளை முன்னிட்டு கல்லூரி வளாகத்தில் மகாத்மாவின் உருவசிலை அமைக்கப்பட்டுள்ளது.

Advertising
Advertising

விழாவில் பேசிய கோவிந்த், “மகாத்மா காந்தியின் உருவசிலையை திறந்து வைத்ததை பெருமையாக கருதுகிறேன். மகாத்மாவிற்கு மரியாதை செலுத்தும் வகையில் அவரது உருவசிலையை அமைத்துள்ள மிரியம் கல்லூரிக்கு எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். காந்தியின் இந்த உருவச்சிலை இந்திய மக்கள் உங்களுக்கு பரிசாக அளித்தது. ஆனால், மகாத்மா அனைத்து கலாச்சாரம், சமூகம் என எந்த பாகுபாடின்றி அனைவருக்கும் சொந்தமானவர்,” என்றார்.

Related Stories: