இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியம் மூலம் மேற்கு வங்க அரசியலில் நுழைகிறாரா கங்குலி?

கொல்கத்தா: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியம் மூலம் மேற்கு வங்க அரசியலில் கங்குலி நுழைகிறார் என கூறப்படுகிறது.மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு நெருக்கமாக கடந்த 2 நாட்களுக்கு முன் வரை கருதப்பட்டவர் முன்னாள் கிரிக்கெட் வீரர் கங்குலி. கடந்த 2015ம் ஆண்டில் ஜக்மோகன் டால்மியா மறைந்ததை அடுத்து வங்காள கிரிக்கெட்  கூட்டமைப்பின் தலைவராக கங்குலி தேர்ந்தெடுக்கப்பட மம்தா மிக உதவினார்.இந்நிலையில், மம்தாவின் தீவிர ஆதரவாளராக கருதபட்ட கங்குலியை பாஜவுக்கு வருமாறு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். ஆனால், அதை அவர் நிராகரித்தார். அதே நேரத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் தூதர் பதவியை கங்குலி  ஏற்றுக்கொண்டார்.இந்த நிலையில் டெல்லியில் உள்ள உள்துறை அமைச்சர்  அமித்ஷாவின் வீட்டில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் பிரதிநிதிகள் கூட்டத்தில் அமித்ஷாவின் மகன் ஜெய்ஷா மற்றும் அசாமின் பிரபல  அரசியல் வாதியான பிஸ்வா சர்மா உள்ளிட்டோர் பங்கேற்ற கூட்டத்தில் கங்குலியும் பங்கேற்றார். இது அவரது அரசியல் பயணத்துக்கு வழிவகுத்தது எனலாம்.

பிசிசிஐ தலைவர் பதவிக்கு போட்டியிட்ட முன்னாள் கிரிக்கெட்வீரர் பிரிஜேஷ் படேல், டெல்லி கிரிக்கெட் வாரிய தலைவர் ரஜாத் சர்மா ஆகியோர் போட்டியில் இருந்து விலகியதை தொடர்ந்து கங்குலி பிசிசிஐ தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.  இந்த பிசிசிஐ தலைவர் பதவி மூலம் மேற்கு வங்க அரசியலில் கங்குலி அடியெடுத்து வைக்கிறார் என அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.இது தொடர்பாக பாஜ தலைவர்கள் கூறுகையில், `வரும் 2021ம் ஆண்டு மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலில் பாஜவுக்கு கங்குலி பிரசாரம் செய்வார் அல்லது அப்போது பாஜவில் முக்கிய பங்காற்றுவார்’ என தெரிவித்துள்ளனர்.

Related Stories: