மே.வங்கத்தில் 2021 தேர்தலுக்கு தயாராகும் பாஜ: திறமையானவர்களை தேர்வு செய்ய குழு

கொல்கத்தா: ‘`மேற்கு வங்கத்தில் வரும் 2021ம் ஆண்டு நடைபெற இருக்கும் தேர்தலை எதிர்கொள்ள திறமையானவர்களை தேர்வு செய்வதற்கான குழு விரைவில் அமைக்கப்படும்,’ என்று இம்மாநில பாஜ தலைவர் திலிப் கோஷ்  தெரிவித்துள்ளார்.

கடந்த மக்களவைத் தேர்தலில், மேற்கு வங்கத்தில் உள்ள 42 தொகுதிகளில் 18 தொகுதிகளை பாஜ கைப்பற்றியது. இது ஆளும் திரிணாமுல் பெற்றதை விட 4 தொகுதிகள் மட்டுமே குறைவு. அதிலும், கடந்த 2014 மக்களவை தேர்தலில் பாஜ 2  தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றதுடன் ஒப்பிடுகையில், பாஜ அங்கு அசுர வளர்ச்சி பெற்றுள்ளது. இந்நிலையில், வரும் 2021ம் ஆண்டில் இம்மாநிலத்தில் நடக்க இருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற  நோக்கில், தற்போதே பாஜ அங்கு மும்முரமாக களம் இறங்கி உள்ளது.

இது தொடர்பாக மாநில பாஜ தலைவர் திலிப் கோஷ் கூறியதாவது:ஒவ்வொரு தொகுதியில் இருந்தும் 4 பேர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அவர்கள் பாஜ அமைப்பு தலைவர்களாவோ அல்லது வரும் 2021 தேர்தல் வேட்பாளர்களாகவோ தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளது. கடந்த ஆண்டுகளில் ஆற்றிய கட்சி பணி,  பின்புலம் குறித்த ஆய்வு ஆகியவற்றின் அடிப்படையில் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். நீண்ட காலமாக கட்சிக்காக உழைத்தவர்கள், வேறு கட்சியில் இருந்து இணையும் புதியவர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்படும் என்றார்.

Related Stories:

>