கர்நாடக மாநிலம் கனகபுராவில் 7 தலை பாம்பின் தோல் கண்டுபிடிப்பு

பெங்களூரு:  கர்நாடக மாநிலம் கனகபுராவில் உள்ள ஒரு கிராமத்தில் 7 தலை கொண்ட பாம்பின் தோல் காணப்பட்டுள்ளது. கனகபுராவில் உள்ள மரிகவுடனா டோடி என்ற கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஒரு கோயிலின் அருகில் 7 தலை  கொண்ட பாம்பின் தோலை கிராமத்தினர் பார்த்து ஆச்சரியம் அடைந்துள்ளனர். மேலும் புராண கதைகளில் உள்ள பாம்பு உண்மையில் இருக்கக்கூடும் என்று நம்புகின்றனர்.இதுகுறித்து கிராமத்தினர் கூறியதாவது: இதே போன்ற தோல் சுமார் 6  மாதத்திற்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பாம்புவின் தோல் கண்டுப்பிடிக்கப்பட்ட இடத்தில் சிறப்பு அம்சம் இருப்பதாக நினைத்து இங்கு ஒரு கோயில் கட்டியுள்ளோம்.

Advertising
Advertising

தற்போது அந்த கோயில் இருந்து சுமார் 10 அடி தூரத்தில் உள்ள பாலப்பா என்பவரின் வயலில் 7 தலை கொண்ட பாம்பின் தோல் உள்ளது. இதனை காலையில் வளாகத்தை சுத்தம் செய்து கொண்டிருந்த கோயிலின் ஊழியர் ஒருவர் பார்த்து  கிராமத்தினருக்கு தெரிவித்தார். தொடர்ந்து இந்த செய்தி தொலைக்காட்சியில் மற்றும் சமூக ஊடகங்களில் பரவத் தொடங்கியதும். தாலுகாவில் உள்ள பிற கிராமங்களைச் சேர்ந்தவர்கள் பாம்பின் தோலை காண திரண்டனர் என தெரிவித்தார்.

Related Stories: