பழைய காரை விற்று மோசடி

சென்னை: சொகுசு காரை விற்பனை செய்துவிட்டு அதற்கான பணத்தை தராமல் மோசடி ெசய்த பழைய கார் விற்பனையாளரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.சென்னை விருகம்பாக்கம் ஸ்டேட் பேங்க் காலனி 3வது தெருவை சேர்ந்தவர் சிவராமகிருஷ்ணன் (53). தொழிலதிபர். நவீன வசதிகள் கொண்ட தனது சொகுசு காரை விற்பனை செய்ய முடிவு செய்தார். அதன்படி கடந்த மாதம் 1ம் தேதி விருகம்பாக்கம் பகுதியில் பழைய கார்களை வாங்கி விற்பனை செய்து வரும் செவ்வாபேட்டையை ேசர்ந்த பிரேம்குமாரிடம்  சொகுசு காரை கொடுத்துள்ளார்.

Advertising
Advertising

நல்ல விலைக்கு விற்பனை செய்து வருவதாக கூறிய அவர், காரை விற்பனை செய்துவிட்டு கார் விற்பனை செய்யவில்லை என்று கூறி ஏமாற்றி வந்துள்ளார். இதுகுறித்து தொழிலதிபர் சிவராமகிருஷ்ணன், கார் வாங்கி விற்பனை செய்த பிரேம்குமார் மீது விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் புகாரின் படி போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து சிவராமகிருஷ்ணன் சம்பந்தப்பட்ட நபர் மீது வழக்கு பதிவு ெசய்ய கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். பின்னர் நீதிமன்ற உத்தரவுப்படி பழைய கார் வாங்கி விற்பனை செய்து வரும் பிரேம்குமார் மீது விருகம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: