வடசென்னை மாவட்ட வக்கீல்கள் பிரிவு இணை செயலாளர் மறைவு: எடப்பாடி, ஓபிஎஸ் இரங்கல்

சென்னை: வடசென்னை மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் மறைவுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் வெளியிட்ட இரங்கல் அறிக்கை: வடசென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் தட்சிணாமூர்த்தி மாரடைப்பால் மரணமடைந்து விட்டார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருந்தமுற்றோம். தட்சிணாமூர்த்தியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதி பெற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertising
Advertising

Related Stories: