தேர்தல் பிரமாண பத்திரத்தில் உண்மை மறைப்பு விசாரணையை சந்திக்க வேண்டும்: முதல்வர் பட்நவிசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

புதுெடல்லி: மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்நவிசுக்கு எதிரான தேர்தல் முறைகேடு வழக்கில்,  அவர் விசாரணையை எதிர் கொள்ள வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பு மனுவுடன் சேர்த்து தாக்கல் ெசய்யும் பிரமாண பத்திரத்தில் தங்கள் மீது நிலுவையில் இருக்கும் வழக்குகள் மற்றும் சொத்து விவரங்களை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயம். ஆனால்,  மகாராஷ்டிராவில் ஆட்சி செய்யும் பாஜ முதல்வர் தேவேந்திர பட்நவிஸ், கடந்த 2014ம் ஆண்டு தேர்தலின்போது தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் தன் மீதான இரண்டு கிரிமினல் வழக்குகள் உள்ள தகவலை மறைத்து விட்டதாக புகார்  எழுந்தது. பட்நவிசுக்கு எதிராக கடந்த 1996 மற்றும் 1998ம் ஆண்டுகளில் இரண்டு மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. எனினும், இந்த வழக்குகளில் இன்னும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. இந்த வழக்குகள் குறித்த  விவரங்களை பட்நவிஸ் தமது பிரமாண பத்திரத்தில் குறிப்பிடவில்லை என தெரிகிறது.

சமூக ஆர்வலரும் வழக்கறிஞருமான சதீஷ் உன்ேக இது தொடர்பாக மும்பை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை, மனுவை தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து உச்ச  நீதிமன்றத்தில்  உன்கே மேல்முறையீடு செய்தார். இந்த மனு  தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனுவை தள்ளுமபடி செய்யும்படி பட்நவிஸ் சார்பில் வலியுறுத்தப்பட்டது. அதை நிராகரித்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை பட்நவிஸ் சந்திக்க  என்று உத்தரவிட்டனர்.  ‘தனக்கு எதிராக இரண்டு கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருப்பது பட்நவிசுக்கு நன்றாகத் தெரியும். இருந்தும், அதை அவர் பிரமாண பத்திரத்தில் குறிப்படவில்லை,’ என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

Related Stories: