காந்தியடிகள் 150வது பிறந்தநாள் தமிழகம் முழுவதும் பாஜ பாதயாத்திரை

சென்னை: காந்தியடிகளின் 150வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அக்ேடாபர் 2ம் தேதி முதல் 25ம் தேதி வரை பாஜக சார்பில் பாதயாத்திரை நடக்கிறது.மகாத்மா காந்தி சங்கல்ப யாத்திரை என்ற பெயரில் அக்டோபர் 2ம் தேதி முதல் 25ம் தேதி வரை அனைத்து பாராளுமன்ற தொகுதிகளிலும் நடத்தப்போவதாக தமிழக பாஜக அறிவித்துள்ளது. இதற்காக பாஜக துணை தலைவர் பி.டி.அரசகுமார்  பாதயாத்திரை குழுவின் மாநில பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த பாதயாத்திரையில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தேசிய செயலாளர் எச்.ராஜா, பொது செயலாளர்கள் வானதி சீனிவாசன், கருப்பு முருகானந்தம், சென்னை கோட்ட பொறுப்பாளர் எம்.சக்ரவர்த்தி, பாஜக மாநில  செயலாளர் கரு.நாகராஜன், ஏ.என்.எஸ்.பிரசாத், இளைஞர் அணி தலைவர் வினோஜ் பி.செல்வம், நயினார் நாகேந்திரன், கேசவ விநாயகம் உள்ளிட்ட முன்னணி தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். இவர்களுக்கு பாராளுமன்ற தொகுதிகள்  ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு தொகுதி பொறுப்பாளர்கள், அமைப்பாளர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் இந்த தலைவர்களுடன் இணைந்து பாத யாத்திரையில் கலந்து கொள்வார்கள்.

Related Stories: