பாவப் பணத்தில் ஆட்சி கவிழ்ப்பு குமாரசாமி குற்றச்சாட்டு

பெங்களூரு :கர்நாடகாவில் முன்னாள் முதல்வர் குமாரசாமி நேற்று  நிகழ்ச்சி ஒன்றில் பேசியதாவது: எனக்கு  அமலாக்கத்துறை, சிபிஐ விசாரணை குறித்து எள்ளளவும் பயமில்லை. இன்றைய  அரசியல், திருடர்களுக்குத்தான் சாதகமாக உள்ளது. நல்லவர்களுக்கு கிடையாது.  எனது தலைமையில் காங்கிரஸ், மஜத கூட்டணி  அரசு நனறாக நடந்தது.  அதை  கவிழ்க்க பாஜ ரூ.30 கோடி செலவு செய்தது. நான் பாவப்பட்ட பணத்தை  சம்பாதிக்கவில்லை. அவர்கள்தான் பாவத்தில் சம்பாதித்த பணத்தில் ஆட்சியை கவிழ்த்தனர். இவ்வாறு அவர் கூறினார்.

Advertising
Advertising

Related Stories: