எல்ஐசி எஸ்சி, எஸ்டி மற்றும் பிற்படுத்தப்பட்டோர் ஊழியர் நலச்சங்கத்தினர் மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக அலுவலகத்தில் எல்.ஐ.சி. எஸ்சி/எஸ்டி மற்றும் பிற்படுத்தப்பட்டோர் ஊழியர் நலச் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவின் ஒருங்கிணைப்பாளர்கள் ர.எ.ராசு மற்றும் கு.கமலக்கண்ணன் ஆகியோர் நேற்று  நேரில் சந்தித்து பேசினர். அப்போது அவர்கள், “எல்.ஐ.சி. நிர்வாகம் வெளியிட்டுள்ள எழுத்தர் பதவி ஆட்கள் எடுப்புக்கான தேர்வாணையில் இந்தி, ஆங்கிலத்தில் தேர்வு என்பதில் இந்தியை நீக்கி, தமிழ் மற்றும் மலையாள மொழிகளை இணைக் கோரியும், 10 சதவீத பொருளாதார அளவுகோலை தமிழ்நாடு ஏற்றுக் கொள்ளாத போது, எல்.ஐ.சி. நிர்வாகம் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான 10 சதவீத ஒதுக்கீட்டை இத்தேர்வில் அறிவித்துள்ளதை உடனே நிறுத்தக் கோரியும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்றும் கோரிக்கை மனு அளித்தனர்.

Advertising
Advertising

Related Stories: