தமிழகத்தில் அலட்சியக்கொலைகள் இன்னும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது, அவை நிறுத்தப்பட வேண்டும்: கமல்ஹாசன்

சென்னை: தமிழகத்தில் அலட்சியக்கொலைகள் இன்னும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது, அவை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். சுபஸ்ரீ மரணம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ள அவர், இரங்கல் தெரிவித்துக் கொண்டிருப்பதற்காக மட்டுமே நாம் இங்கு இல்லை. இதை நிறுத்தவைப்பது நமது கடமை. அரசின் அலட்சியம் அக்கறையாக மாற வேண்டும். சாலையில் மகளின் ரத்தத்தை பார்த்தால் மரண வலி, பெண்களை பெற்ற எனக்கும் அந்த வலி. பிள்ளைகளின் மரணச் செய்தியை பெற்றோரிடம் சொல்வது கொடுமையானது. சாதாரண மக்கள் அசாதாரணமான தலைவர்களை உருவாக்குகிறார்கள் என்று கூறியுள்ளார். இந்நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் பேட்டியளித்த அவர்,பேனர் விவகாரத்தை கொலை குற்றமாக பார்க்க வேண்டும் என கூறியுள்ளார்.

Advertising
Advertising

Related Stories: