வாக்குச் சீட்டு முறையில் தேர்தல் நடத்த சாத்தியமே இல்லை: தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா பேட்டி

டெல்லி: வாக்குச் சீட்டு நடைமுறையை திரும்பக் கொண்டு வருவதற்கு சாத்தியமே இல்லை என இந்திய தலைமை தேர்தல் ஆணையர்  சுனில் அரோரா தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா, அரியானா, ஜார்கண்ட் மாநிலங்களுக்கு இந்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கிடையே, முதற்கட்டமாக மகாராஷ்டிரா மாநிலத் தேர்தல் அதிகாரி, அம்மாநில போலீசார், வருமான வரித்துறையினர், கலால் துறையினருடன், தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா ஆலோசனை நடத்தினார்.

Advertising
Advertising

பின்னர் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, வாக்குச் சீட்டு முறையில் தேர்தல் நடத்த வேண்டும் என சில கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிவித்தார். ஆனால் அதற்கு சாத்தியமே இல்லை என்பதை அவர்களிடம் மென்மையாக எடுத்துரைத்ததாகக் கூறினார்.

வாக்குச்சீட்டு முறை என்பது வரலாறாகி விட்டதாகத் தெரிவித்த அவர், அதைத் திரும்பக் கொண்டு வருவதற்கு சாத்தியமே இல்லை என்றும் குறிப்பிட்டார். கடிகாரம், வாகனம் போன்ற மற்ற எந்திரங்களைப் போல் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களிலும் கோளாறு ஏற்படும் எனக் கூறிய சுனில் அரோரா, ஆனால் ஹேக் செய்வது இயலாத காரியம் என விளக்கம் அளித்தார்.

Related Stories: