மாதவரத்தில் போலி ஆவணங்கள் மூலம் 25 கோடி அரசு நிலம் அபகரிப்பு: தந்தை, மகன் உள்பட 3 பேர் கைது

சென்னை: மாதவரத்தில் போலி ஆவணம் மூலம் அரசுக்கு சொந்தமான 25 கோடி மதிப்புள்ள 4.45 ஏக்கர் நிலத்தை அபகரித்த தந்தை, மகன் உட்பட 3 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது ெசய்தனர். சென்னை மாதவரத்தில் ‘டிஏஎல்சிஓ’ என்ற அரசுக்கு சொந்தமான நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்திற்கு மாதவரத்தில் 4.45 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தை பல ஆண்டுகளாக ‘டிஏஎல்சிஓ’ நிறுவனம் பயன்படுத்தாமல் இருந்தது. இதற்கிடையே கடந்த மாதம் அரசுக்கு சொந்தமான நிலத்தை மனைகளாக பிரித்து சிலர் விற்பனை செய்ய விளம்பர பலகை வைத்திருந்தனர். இதை பார்த்த ‘டிஏஎல்சிஓ’ நிறுவனத்தின் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே நிலத்தை  மனைகளாக பிரித்த நபர்களிடம் அதிகாரிகள் அரசுக்கு சொந்தமான நிலத்தை நீங்கள் எப்படி விற்கலாம்? என கேட்டனர். அதற்கு அவர்கள், ‘‘இது எங்கள் இடம் தான்’’ என்று நிலத்திற்கான ஆவணங்களை காட்டினர்.

Advertising
Advertising

இந்த சம்பவம் குறித்து ‘டிஏஎல்சிஓ’ அதிகாரிகள் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதனை சந்தித்து நேரில் புகார் அளித்தனர். புகாரின்படி மத்திய குற்றப்பிரிவு போலீஸ் விசாரணை நடத்த கமிஷனர்  உத்தரவிட்டார். அதைதொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது மாதவரத்தை சேர்ந்த பிச்சைமுத்து (54), அவரது மகன் அரிகிருஷ்ணன் (28) மற்றும் பிச்சைமுத்து நண்பர் பார்த்தசாரதி (40) ஆகியோர் போலி ஆவணம் தயாரித்து ‘டிஏஎல்சிஓ’ நிறுவனத்திற்கு சொந்தமான 4.45 ஏக்கர் நிலத்தை  தங்களது பெயருக்கு பதிவு செய்தது தெரியவந்தது.அதைதொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் அரசு நிறுவனத்திற்கு சொந்தமான 4.45 ஏக்கர் போலி ஆவணம் மூலம் அபகரித்த பிச்சைமுத்து, அவரது மகன் அரிகிருஷ்ணன், பார்த்தசாரதி ஆகியோரை ேநற்று கைது செய்தனர். அவர்களிடம்  இருந்து போலி ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

„ அசோக்நகர் 30வது ெதருவை சேர்ந்தவர் சுந்தர் (45). சொந்தமாக கார் வைத்துள்ளார். இவரது காரை நுங்கம்பாக்கம் தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தில் வாடகைக்கு விட்டுள்ளார். கடந்த 5ம் தேதி குரோம்பேட்டையை ேசர்ந்த சிலர் திருச்சி  செல்ல காரை வாடகைக்கு எடுத்துள்ளனர். சுந்தரின் காரை அவரது டிரைவர் நாகநாதன் (54) எடுத்து சென்றார். கடந்த 7ம் தேதி சென்னைக்கு வர வேண்டும். ஆனால் நாகநாதன் இதுவரை சென்னைக்கு காருடன் வரவில்லை. கார் டிரைவர்  நாகநாதனையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த காரின்  உரிமையாளர் சுந்தர் நேற்று முன்தினம் இரவு அசோக் நகர் காவல் நிலையத்தில் டிரைவர் நாகநாதனிடம் இருந்து காரை மீட்டு தர கோரி புகார் அளித்தார்.  அதன்படி போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: