கொத்தடிமைகளாக இருந்து மீட்கப்பட்ட 15 பேர் மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு : கோரிக்கை மனு அளித்தனர்

சென்னை: கொத்தடிமைகளாக இருந்து மீட்கப்பட்ட 15 பேர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.தர்மபுரி, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த கொத்தடிமைகள் 15 பேரை ‘‘விடுவிக்கப்பட்ட கொத்தடிமை மறுவாழ்வு நலச் சங்கத்தைச் சேர்ந்தவர்களும், இன்டர்நேசனல் ஜஸ்டிஸ் மிஷன் இயக்கத்தைச் சேர்ந்த சமூக  ஆர்வலர் வி.சாம் ஜெபதுரை மற்றும் இயக்குனர் மெர்லின் பிரீடா ஆகியோரும் மீட்டு, மறுவாழ்வு அளித்து அவர்கள் சுயமாக தொழில் செய்து கொத்தடிமை வாழ்க்கையிலிருந்து மீட்பதற்கு உரிய வழிவகை செய்து வருகின்றனர்.

Advertising
Advertising

இவ்வாறு கொத்தடிமை வாழ்க்கையிலிருந்து மீண்டு, சுயமாக தொழில் நடத்தி வருபவர்கள், தர்மபுரி நாடாளுமன்றத் தொகுதி திமுக உறுப்பினர் டி.என்.வி.எஸ்.செந்தில்குமார் தலைமையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை ேநற்று காலை  அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து, தங்கள் சுயதொழிலில் செய்த பொருட்களை பரிசாக அளித்து வாழ்த்து பெற்றதோடு, கொத்தடிமை தொழில் முறையிலிருந்து மீட்கப்படும் மக்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களின் நலன் கருதி, ஆதார்  அட்டை, குடும்ப ரேஷன் அட்டை வழங்கிட சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென கோரிக்கை மனு அளித்தனர். அப்போது, ஆர்.எஸ்.பாரதி, ஆ.ராசா ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories: