அமைச்சர் வெளிநாடு பயணம்

சென்னை: செய்தி மற்றும் விளம்பர துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ மொரீசியஸ் ஜனாதிபதி இல்லத் திருமண விழாவில் பங்கேற்க இன்று மொரீசியஸ் செல்கிறார். மொரீசியஸ் நாட்டின் ஜனாதிபதி பரமசிவம் பிள்ளை இல்லத் திருமண விழாவில் பங்கேற்பதற்காக அவரின் சிறப்பு அழைப்பின்பேரில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ இன்று  மொரீசியஸ் நாட்டிற்கு செல்கிறார். பயணத்தை முடித்துக் கொண்டு வருகிற 26ம் தேதி சென்னை திரும்புகிறார். மேலும், எம்.ஜி.ஆர். திருவுருவ சிலையை மொரீசியஸ் நாட்டில் நிறுவிட, அவரது திருவுருவச் சிலையை அந்நாட்டிற்கு அளிக்கும் விழாவிலும் அமைச்சர் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளார்.

Advertising
Advertising

Related Stories: