சிக்க வைத்த சாட்சியம்

ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்தின் உரிமையாளர்களாக இந்திராணி முகர்ஜி, அவரது கணவர் பீட்டர் முகர்ஜி ஆகியோர் உள்ளனர். ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் அந்நிய முதலீடு பெறுவதற்கு, அப்போதைய மத்திய நிதியமைச்சராக இருந்த சிதம்பரம்தான் ஒப்புதல் வழங்கியுள்ளார். இதற்கு பிரதிபலனாக கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனம், ஆலோசகர் நிறுவனமாக நியமிக்கப்பட்டு, அதற்கு ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் பணம் வழங்கியுள்ளது. இந்த நிதி முறைகேடு தொடர்பாக இந்திராணி முகர்ஜி கடந்த 2017ம் ஆண்டு அரசு தரப்பு சாட்சியாக (அப்ரூவர்) மாறி சாட்சியம் அளித்தார். அவர் தனது சாட்சியத்தில், ‘ஐஎன்க்ஸ் மீடியா நிறுவனம் அன்னிய முதலீடு அனுமதி பெற, கடந்த 2008ம் ஆண்டு, அப்போதைய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை டெல்லியில் உள்ள நார்த் பிளாக் அலுவலகத்தில் நானும், எனது கணவர் பீட்டர் முகர்ஜியாவும் சந்தித்து விண்ணப்பம் கொடுத்தோம்.

அப்போது அவர், இதற்கு பிரதி பலனாக, கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனத்துக்கு உதவ வேண்டும் என கூறினார். அதன்பின் கார்த்தி சிதம்பரத்தை டெல்லியில் உள்ள 5 நட்சத்திர ஓட்டலில் கடந்த 2008ம் ஆண்டு நாங்கள் சந்தித்து பேசினோம். அவர் தனது அல்லது தனது ‘செஸ் மேனேஜ்மென்ட் மற்றும் அட்வான்டேஜ் ஸ்டேரடஜிக் கல்சல்டிங் பிரைவேட் லிமிடெட் (ஏஎஸ்சிபிஎல்) நிறுவனங்களின் வெளிநாட்டு வங்கி கணக்கில் 1 மில்லியன் அமெரிக்க டாலர் பணம் (₹7 கோடி) செலுத்தும்படி கேட்டுக் கொண்டார். அதன்பின், எனது கணவர் பீட்டர்தான் பணத்தை செலுத்தினார். ஆனால், அவர் எவ்வளவு பணம் செலுத்தினார் என தெரியவில்லை,’ என்று தெரிவித்தார். இதற்கான ஆவணங்களின் அடிப்படையில்தான் ப.சிதம்பரம் மீது நிதி மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: