நெல்லை மனோன்மணியம் பல்கலைக்கழகத்தில் திருமாவளவனுக்கு பிஎச்டி பட்டம்: கவர்னர் வழங்கினார்

நெல்லை: நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுக்கு பிஎச்டி பட்டத்தை கவர்னர் பன்வாரிலால் புரோகித் வழங்கினார். நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 27வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. துணைவேந்தர் பிச்சுமணி வரவேற்றார். சென்னை ஐகோர்ட் முன்னாள் நீதிபதி வெங்கட்ராமன் பட்டமளிப்பு விழா உரை நிகழ்த்தினார். உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசினார். விழாவில் 752 பேருக்கு பட்டங்களை கவர்னர் பன்வாரிலால் புரோகித் வழங்கினார்.

விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், எம்பியுமான திருமாவளவனுக்கு பிஎச்டி பட்டத்தை கவர்னர் வழங்கினார்.  இவர் நெல்லை பல்கலைக்கழக குற்றவியல் மற்றும் குற்ற நீதித்துறையில் ‘மீனாட்சிபுரம் மதமாற்றம்’’   தொடர்பாக ஆய்வு செய்து தனது ஆய்வுக் கட்டுரையை சம்ர்ப்பித்தார். அதற்காக அவருக்கு பிஎச்டி பட்டம் வழங்கப்பட்டது. தனது தாய் பெரியம்மாவையும் திருமாவளவன் உடன் அழைத்து வந்திருந்தார்.

Related Stories: