பஞ்சாப், அசாம், மிசோரம் உடன்படிக்கையில் நாட்டின் ஒற்றுமைக்கு வலிமை சேர்த்த ராஜிவ்: ராகுல் பெருமிதம்

புதுடெல்லி: ‘மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி, பஞ்சாப், அசாம், மிசோரம் உடன்படிக்கையில் இந்திய ஒற்றுமையை வலிமைப்படுத்தியவர்,’ என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். கடந்த 20ம் தேதி மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் 75வது பிறந்த நாள், காங்கிரஸ் சார்பில் விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி ராகுல் நேற்று வெளியிட்ட தனது டிவிட்டரில், ‘பஞ்சாபின் அமைதிக்காக ஏற்பட்ட ராஜிவ்-லாங்கோவால் உடன்படிக்கை, பிரதமர் ராஜிவ் காந்தி மற்றும் ஷிரோமணி அகாலி தளத்தின் தலைவர் ஹர்சந்த் சிங் லோங்கோவால் ஆகியோரிடையே 1985ம் ஆண்டு ஜூலை 24ம் தேதி கையெழுத்தானது. மிசோரமில் கிளர்ச்சி மற்றும் கலவரங்களை முடிவுக்கு கொண்டு வருவதற்காக 1986ம் ஆண்டு இந்திய அரசாங்கம், மிசோ தேசிய முன்னணி இடையே அமைதி உடன்படிக்கை கையெழுத்தானது.

இதேபோல் சட்ட விரோத குடியேறியவர்களை அடையாளம் காணுதல் மற்றும் நாடு கடத்தவேண்டும் என்பதை வலியுறுத்தி அனைத்து அசாம் மாணவர் அமைப்புகளால் 6 ஆண்டுகள் நடந்த போராட்டம் அமைதி உடன்படிக்கையின் மூலமாக முற்றுபெற்றது. 1985ம் ஆண்டுஆகஸ்ட் 15ம் தேதி  ராஜிவ் காந்தி முன்னிலையில் அமைதி உடன்படிக்கை ைகயெழுத்தானது. பஞ்சாப், அசாம், மிசோரம் உடன்படிக்கையில் இந்திய ஒற்றுமையை வலிமைப்படுத்தியவர் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி,’ என்று பதிவிட்டுள்ளார்.

Related Stories: