கடுமையான நிதி நெருக்கடிக்கு மத்திய அரசின் பொருளாதார நடவடிக்கையே காரணம்: தமிழ்நாடு முஸ்லிம் லீக் குற்றச்சாட்டு

சென்னை: தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா நேற்று வெளியிட்ட அறிக்கை: சர்வதேச அளவில் மிகப்பெரிய வாகன சந்தையில் 4வது இடத்தில் இந்தியா உள்ளது. இதுவரை இல்லாத அளவு கார், இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனங்கள் கடுமையான நெருக்கடியைச் சந்தித்து வருகின்றன. கடந்த 9 மாதங்களில் வாகன விற்பனை 31% சரிந்துள்ளது. முக்கியமாக வாகனங்களின் விற்பனை குறைவால் உற்பத்தியும் நிறுத்தப்பட்டு வருகிறது. இதனால் பல நிறுவனங்கள் மற்றும் ஆலைகள் மூடப்பட உள்ளன. பல ஆயிரக்கணக்கானோர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சமீப நாட்களில் பங்குச் சந்தையும் மிகப் பெரிய சரிவுகளைச் சந்தித்துள்ளது. நாட்டின் நிதிப் பற்றாக்குறையும் அதிகரித்து வருகிறது. கட்டுமானத் துறையும் முடங்கி விட்டது. அந்நிய நேரடி முதலீடு, பங்குச் சந்தைகளில் அந்நிய முதலீடு ஆகியவையும் குறைந்து வருகின்றன.நாட்டில் ஏற்பட்டுள்ளது பொருளாதார சுணக்கமல்ல. உண்மையில் தேசம் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. தற்போது நாட்டில் மிகப்பெரிய நிதி நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. இவை அனைத்துக்கும் மத்திய அரசின் தவறான பொருளாதாரக்கொள்கைதான் காரணம். ஆனால், பொருளாதார விவகாரத்தில் தனது தோல்விகளை மறைப்பதற்காக மத்திய அரசு வேறு பிரச்னைகளை ஏற்படுத்தி மக்களின் கவனத்தை திசை திருப்பி வருகிறது. ஆகவே மக்களை திசை திருப்பும் வேலையை மத்திய அரசு நிறுத்திக் கொண்டு பொருளாதாரத்தை சரி செய்ய போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: