நாட்டின் நிதிநிலை திரும்பும் திசையெல்லாம் கவலையளிக்கும் விதத்தில் உள்ளது: காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அபிஷேக் சிங்வி

டெல்லி: நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிப்பதாகவும் இது நிதி ரீதியிலான அவசர கால சூழல் போன்று தோன்றுவதாக காங்கிரஸ் கட்சி கவலை தெரிவித்துள்ளது. இது குறித்து பேசிய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அபிஷேக் சிங்வி , தற்போதைய பொருளாதார நெருக்கடிகளில்  இருந்து  ஆளும் பாஜக அரசு மக்களை திசைதிருப்பி வருவதாக குற்றம் சாட்டினார்.  

Advertising
Advertising

நாட்டின் வாகன விற்பனை அகல பாதாளத்தில் விழுந்து இருப்பதாகவும் இந்த நிலை கடந்த 18 மாதங்களுக்கு முன் தொடங்கி தற்போது தீவிரமடைந்து இருப்பதாகவும் அவர் கூறினார். குறையும் பொருளாதார வளர்ச்சி விகிதம் வேலை வாய்ப்புகள் இழப்பு , ரியல் எஸ்டேட் துறை மந்தம் , ரூபாய் மதிப்பு சரிவு, அந்நிய முதலீடு வீழ்ச்சி என எல்லா திசைகளிலும் நாட்டின் பொருளாதாரம் கவலை தருவதாகவே இருக்கிறது என்று அவர் கூறினார்.

ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை குறைத்த போதிலும்  அதன் பலன் மக்களை முழுமையாக சென்றடையவில்லை என  அபிஷேக் சிங்வி சுட்டிக்காட்டியுள்ளார். கடலை திருப்பி செலுத்த இயலாத பொருளாதாரத்தின் நினைந்த பிரிவுனரின் சிறிய அளவிலான கடன் தொகையை தள்ளுபடி செய்ய மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இன்சால்வன் சி எனப்படும் திவால் சட்டத்தின் கீழ் இந்த சலுகையை அளிக்க பரிசீலித்து வருவதாக டெல்லியில் மத்திய அரசு உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஏனிலும் இந்த சலுகையை பெறுபவர் அடுத்த 5 ஆண்டுகளுக்கு கடன் தள்ளுபடி பெற இயலாது என்றும் அவர் கூறினார். சிறுகடன் நிறுவனங்களை பாதுகாக்கும் நோக்கத்தோடு  இது பரிசீலிக்க படுவதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.

Related Stories: