ஆட்டோவில் 2 கிலோ கஞ்சா கடத்திய 4 பெண்கள் உட்பட 6 பேர் கைது : 2.5 லட்சம், பைக், ஆட்டோ பறிமுதல்

சென்னை: ஆட்டோவில் கஞ்சா கடத்திய 4 பெண் வியாபாரிகள் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை பெரியமேடு பகுதியில் சிலர் இரவு நேரங்களில் கஞ்சா விற்பனை செய்வதாக மெரியமேடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், மெரியமேடு இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு கஞ்சா விற்பனை நடைபெறும் பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஹஜ் கமிட்டி கட்டிடம் அருகே சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த ஆட்டோவை மறித்து, அதில் வந்த 4 பெண்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது, அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். உடனே போலீசார் ஆட்டோவை சோதனை செய்த போது, சிறு சிறு பொட்டலங்களாக 2 கிலோ கஞ்சா மற்றும் 2.5 லட்சம் இருந்தது தெரியவந்தது.

Advertising
Advertising

உடனே 4 பெண்களையும் பிடித்து, காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது, புளியந்தோப்பு கே.பி.பார்க் பகுதியை சேர்ந்த முத்துலட்சுமி (28), முனியம்மாள் (48), காந்திமதி (29), ஆனந்தவள்ளி (32) என தெரியவந்தது. இவர்கள் 4 பேரும் பிரபல கஞ்சா வியாபாரிகள் என்றும், இவர்கள் மீது பல்வேறு காவல் நிலையங்களில் கஞ்சா வழக்கு நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. மேலும் கஞ்சா விற்பனைக்கு உடந்தையாக இருந்த புளியந்தோப்பு கே.பி.பார்க்கை சேர்ந்த சரண் (28), ஆட்டோ டிரைவர் கோகுல்தாஸ் (28) உள்பட 6 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2.5 லட்சம், 2 கிலோ கஞ்சா, கடத்தலுக்கு பயன்படுத்திய 2 பைக் மற்றும் ஆட்டோ ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories: