சிபிஎஸ்இ தேர்வு கட்டண உயர்வுக்கு மாயாவதி எதிர்ப்பு

புதுடெல்லி: ‘தேர்வு கட்டணத்தை இரண்டு மடங்காக உயர்த்தியுள்ள சிபிஎஸ்இ, அதனை திரும்ப பெற வேண்டும்,’ என்று பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி வலியுறுத்தி உள்ளார். நாடு முழுவதும் உள்ள 10, 12ம் வகுப்பு மாணவர்களின் தேர்வு கட்டணத்தை இருமடங்காக உயர்த்தி மத்திய இடைநிலை கல்வி வாரியமான சிபிஎஸ்இ கடந்த வாரம் திடீரென அறிவித்தது.இந்நிலையில், இது தொடர்பாக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி நேற்று வெளியிட்ட தனது டிவிட்டர் பதிவில், `எஸ்சி, எஸ்டி பிரிவு மாணவர்கள், பொதுப்பிரிவினரின் தேர்வு கட்டணத்தை சிபிஎஸ்இ இரண்டு மடங்காக உயர்த்தி  உள்ளது. இது மிகவும் துரதிருஷ்டமானது. இது இனவெறி, ஏழைகளுக்கு எதிரான முடிவு. சிபிஎஸ்இ இதை உடனடியாக திரும்ப பெற வேண்டும்,’ என்று கூறி யுள்ளார்.

Advertising
Advertising

Related Stories: