பூமிக்கு பாரமாக இருக்கிறார் ப.சிதம்பரம் - முதல்வர்; விபத்தினால் பதவிக்கு வந்தவர் சிறுமைபடுத்தாமல் இருக்கலாமே - கே.எஸ்.அழகிரி

சென்னை: ப.சிதம்பரத்தை விமர்சித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி பதில் அளித்துள்ளார். ப.சிதம்பரம் இத்தனை ஆண்டுகாலம் மத்திய அமைச்சராக இருந்தும் நாட்டுக்கு ஒரு பயனும் இல்லை என்றும் மேலும் அவர் பூமிக்கு பாரமாக உள்ளார். அவர் தனித்தன்மையுடன் எந்த திட்டமும் கொண்டுவந்து செயல்படுத்தவில்லை, எந்த நிதியும் கொடுக்கவில்லை, எந்த ஒரு புதிய தொழிற்ச்சாலையும் அமைக்கவில்லை, புதிய திட்டங்களை அறிவிக்கவில்லை, காவிரி பிரச்சனை, முல்லை பெரியாறு பிரச்சனை, பாலாறு பிரச்சனை என எதையும் அவர் தீர்க்கவில்லை.

Advertising
Advertising

இது தொடர்பாக கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் ப.சிதம்பரம் மத்திய நிதியமைச்சராக இருந்த போது வர்த்தக துறையில் புரட்சிகரமான சீர்திருத்தங்களை கொண்டு வந்தவர் என்றும், தேசிய வேலைவாய்ப்பு ஊரக உறுதி திட்டத்தை நாடு முழுவதும் நீடித்து கிராம பொருளாதா அடிப்படையை மாற்றியவர் ப.சிதம்பரம் என்று தெரிவித்தார். சென்வாட் வரியை ரத்து செய்து கைத்தறி நெசவாளர்களின் துயரத்தை நீக்கியவர் ப.சிதம்பரம் தான் என்று கே.எஸ்.அழகிரி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சென்னை அருகே நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்துக்கு ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கியவர் என்றும், 2008-ம் ஆண்டு 4 கோடி விவசாயிகளின் கடன் சுமையை போக்க ரூ.65,000 கோடி கடனை தள்ளுபடி செய்தவர் ப.சிதம்பரம் என்று தெரிவித்தார். 2004-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை நாட்டின் வளர்ச்சி விகிதத்தை 9 சதவீதத்துக்கு மேல் உயர்த்தியதில் ப.சிதம்பரத்துக்கு பெரும் பங்கு உள்ளதாகவும், தமிழகமே பாராட்ட வேண்டிய ப.சிதம்பரத்தை விபத்தினால் பதவிக்கு வந்த எடப்பாடி பழனிசாமி சிறுமைபடுத்தாமல் இருக்கலாமே என்று கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கார்த்தி சிதம்பரம்

ஆசியாவின் சிறந்த நிதியமைச்சர் என பட்டம் பெற்ற ப.சிதம்பரத்தை பற்றி முதலமைச்சர் கூறியது, அவரது மனசாட்சியையே உறுத்தும் என்று கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

Related Stories: