சட்டவிரோத டெபாசிட் திட்டங்களுக்கு செக்! : மக்களவையில் புதிய சட்ட மசோதா தாக்கல்

டெல்லி : பொதுமக்களிடம் இருந்து சட்டவிரோதமாக டெபாசிட் திரட்டும் திட்டங்களை தடை செய்யும் மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த மசோதாவை தாக்கல் செய்தார். சட்டவிரோத டெபாசிட் திட்டங்களை நடத்தும் சீட்டு நிறுவனங்களால் முதலீட்டாளர்கள் ஏமாற்றப்படுவது அதிகரித்து வருகிறது. இதை தடுக்க முறைப்படுத்தப்படாத டெபாசிட் திட்டங்கள் தடை மசோதாவுக்கு கடந்த வாரம் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

தற்போதைய நிலையில் சட்டவிரோதமாக டெபாசிட் திரட்டி மக்களை ஏமாற்றுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உறுதியான நடைமுறைகள் இல்லாத நிலை உள்ளது. இதை மாற்றும் வகையில் புதிய சட்ட மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது. முறையற்ற வகையில் டெபாசிட் திரட்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும், பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் கிடைக்கவும் இந்த மசோதா வழிசெய்கிறது. சட்டவிரோத டெபாசிட் திட்டங்கள் பலவற்றில் பொது மக்கள் ஏமாற்றப்பட்ட வழக்குகள் ஏராளமாக உள்ள நிலையில், மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

Related Stories: