உபி. பாஜ தலைவராக சுவந்தரா தேவ் நியமனம்

லக்னோ:  உத்தரப் பிரதேச பாஜ தலைவராக மாநில அமைச்சராக இருந்த  சுவந்தரா தேவ் சிங் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  உத்தரப் பிரதேசத்தில் பாஜ தலைவராக இருந்த மகேந்திரநாத் பாண்டே மக்களவை தேர்தலில் வென்று மத்திய அமைச்சராகி உள்ளார்.   இந்நிலையில், உபி. பாஜ.வுக்கு புதிய மாநில தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார். உத்தரப் பிரதேச மாநில ஓபிசி தலைவராக இருந்த சுவந்தரா தேவ் சிங்கை பாஜ மாநில தலைவராக நியமித்து கட்சி மேலிடம் நேற்று உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து, புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள சுவந்தரா தேவ் சிங், முதல்வர் யோகி ஆதித்யநாத் அமைச்சரவையில் போக்குவரத்து துறை அமைச்சராக இருக்கிறார்.

Advertising
Advertising

Related Stories: