பரமக்குடி : பரமக்குடி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகம் வாடகை கட்டித்தில் இயங்குவதால், இடப் பற்றாக்குறையால் திண்டாடி வருவதாக தினகரன் செய்தி வெயிட்டது. இதையொட்டி புதிய கட்டிடம் கட்டும் பணி தொடங்கியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் வட்டார போக்குவரத்து அலுவலகம் செயல்பட்டு வந்தது. மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதியில் உள்ள வாகனங்களும் ராமநாதபுரம் வருவதால் வாகன உரிமையாளர்களு கால விரயம் மற்றும் செலவுகள் அதிகரித்து வந்தது. இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட வாகன பயிற்சி பள்ளிகள் வாகன உரிமையாளர்களிடம் பணத்தை பெற்று வந்தனர்.
இதனால் பரமக்குடியை தலைமையாக வைத்து சாயல்குடி, கடலாடி, முதுகுளத்தூர், கமுதி, பார்த்திபனூர், சத்திரக்குடி, நயினார்கோவில் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த வாகனங்களுக்கு பதிவு உள்ளிட்ட பணிகளை செய்துகொள்வதற்காக கடந்த திமுக ஆட்சியில் வட்டார வாகன ஆய்வாளர் அலுவலகம் தொடங்கப்பட்டது.இந்த அலுவலகம் கடந்த 8 ஆண்டுகளாக மதுரை-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள வாடகை கட்டித்தில் இயங்கி வருகிறது.போதுமான இடவசதி இல்லாததால் இருசக்கர உரிமம் பெற வேண்டியவர்கள் வண்டியை ஓட்டி காட்டவும், நான்கு சக்கர வானங்களை இயக்கவும் போதிய இடமில்லாமல் திணறி வருகிறது.
இதுகுறித்து தினகரன் வாடகை கட்டிடத்தில் இயங்கும் போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகதில் அல்லல்ப்படும் வாகன ஓட்டிகள் என செய்தியாக வெளியிட்டது. இதை தொடர்ந்து கட்டிடம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பரமக்குடி-முதுகுளத்தூர் சாலையில் ரூ.153.5 லட்சம் செலவில் புதிய கட்டிடம் கட்டும் பணி தொடங்கியது. இந்த பணிகள் ஓராண்டுக்குள் முடிவடைந்து வட்டார போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகம் மாற்றப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.