அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பு

டெல்லி : இந்தியா வந்துள்ள அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். 3 நாள் பயணமாக நேற்று இரவு டெல்லி வந்த மைக் பாம்பியோ இன்று காலை பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். அப்போது இரு நாடுகளுக்கு இடையேயான உறவுவை மேம்படுத்துவது தொடர்பாக ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது.

அவர்களுடன் உயர் அதிகாரிகளும் உடன் இருந்தனர். அப்போது இந்தியா - அமெரிக்கா இடையிலான ஏற்றுமதி, இறக்குமதி வரி விதிப்பு, இந்தியா -ஈரான் இடையிலான எண்ணெய் வர்த்தகம், தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை, எச்1 பி மற்றும் எச்4 விசா தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

பிரதமர் மோடியை தொடர்ந்து வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோரையும் இன்று மதியம் சந்திக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வரும் 28,29ம் தேதிகளில் ஜப்பானின் ஒசாகா நகரில் ஜி20 உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்கும் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்பை சந்தித்து பேச உள்ளார். இந்நிலையில் அமெரிக்கா வெளியுறவுத் துறை அமைச்சர் மைக்  பாம்பியோ சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Related Stories: