இந்தியை ஏற்றுக்கொள்ள முடியாது: ராமதாஸ் எதிர்ப்பு

சென்னை: பள்ளி, கல்லூரிகளில் இந்தி கட்டாயம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் பதிவில் அவர் கூறியிருப்பதாவது: நாடு முழுவதும் இளநிலை பட்டப்படிப்பில் இந்தியை கட்டாயப்பாடமாக்குவது குறித்து பல்கலைக்கழகங்களிடம்  பல்கலைக்கழக மானியக்குழு கருத்துகளை கேட்டிருக்கிறது. பள்ளியாக இருந்தாலும், கல்லூரியாக இருந்தாலும் இந்தி கட்டாயப்பாடம் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.  எனவே, தமிழகத்திலுள்ள அனைத்து  அரசு பல்கலைக்கழகங்களும் இந்த யோசனையை கடுமையாக எதிர்க்க வேண்டும். பல்கலைக்கழக துணை வேந்தர்களுக்கு இந்த விஷயத்தில் தேவையான அறிவுரைகளை தமிழக அரசு வழங்க வேண்டும்.

இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

Related Stories: