சேலம், ஜூன் 23: சூரியன் எப்.எம் 93.9 சார்பில், சேலத்தில் நேற்று மாலை நகைச்சுவை பட்டிமன்றம் நடந்தது. இதை பொதுமக்கள் குடும்பத்துடன் வந்து மகிழ்ச்சியோடு கண்டுகளித்தனர். தமிழகத்தின் நம்பர்ஒன் எப்.எம்.ஆக கவுரவிக்கப்பட்டுள்ள, சன் குழுமத்தின் அங்கமான சூரியன் பண்பலை சென்னை, கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி, தூத்துக்குடி, புதுச்சேரி, சேலம், ஈரோடு, வேலூர் என 10 இடங்களில் செயல்பட்டு வருகிறது. சேலம் சூரியன் எப்.எம் 93.9 சார்பில், நேற்று மாலை சேலம் 5ரோடு ஸ்ரீரத்தினவேல் ஜெயக்குமார் திருமண மண்டபத்தில் சொல்வேந்தர் சுகிசிவம் தலைமையில், இளைஞர்கள் வெற்றியை நிர்ணயிப்பது குடும்பச் சூழலா? சுற்றுச் சூழலா? என்ற தலைப்பில் சிறப்பு நகைச்சுவை பட்டிமன்றம் நடைபெற்றது.